Breaking News

மதுரை மாட்டுத்தாவணி நுழைவுவாயில், மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள நுழைவாயில்களை இடித்து அப்புறப்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

அட்மின் மீடியா
0

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவுவாயில், மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள நுழைவாயில்களை இடித்து அப்புறப்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! The Madurai branch of the High Court has ordered the demolition of the 2 entrances obstructing traffic in Madurai

மதுரையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள 2 நுழைவாயில்களையும் இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள 2 நுழைவாயில்களையும் இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார் . அதில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள் நுழைவு வாயில் என்னும் பெயரில் பழமையான அலங்கார வளைவு உள்ளது. அதுமட்டுமின்றி மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் பெரியார் அலங்கார வளைவு என்னும் பெயரில் பழமையான வளைவு உள்ளது. இந்த 2 நுழைவு வாயில்களும் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது.இதனால் விபத்துகள் அதிகம் நிகழ்கிறது. எனவே அதை இடிக்க வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவே, இதற்கு உடனே உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியம், சுந்தர மோகன்  இந்த இரு நுழைவு வாயிலின் தூண்களும் போக்குவரத்துக்கு இடையூறாக சிலையின் நடுவே அமைந்துள்ளது. இத்தகைய தூண்களை பலர் வணிக நோக்கத்திற்கு பயன்படுத்துகின்றனர். போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடையூறாக இருக்கும் நுழைவு வாயில்களை அகற்ற எந்த ஆய்வும் தேவையில்லை.

6 மாதங்களுக்கு உள்ளாக இரு நுழைவு வாயில்களையும் அகற்ற மதுரை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு விரும்பினால் சாலையின் இரு ஓரங்களையும் இணைக்கும் வகையில் பெரிய அளவிலான நுழைவு வாயில்களை அமைத்து கொள்ளலாம் என குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback