Breaking News

ஐநா சபையில் உரை நிகழ்த்த வந்த இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எழுந்து சென்ற பல்வேறு நாடுகளின் தூதர்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஐநா சபையில் உரை நிகழ்த்த வந்த இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எழுந்து சென்ற பல்வேறு நாடுகளின் தூதர்கள் முழு விவரம்



ஐநா பொதுச் சபையில் உரை நிகழ்த்த வந்த இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு நாடுகளின் தூதர்கள் வெளிநடப்பு செய்தனர் பெரும்பாலும் காலியாக இருந்த இருக்கைகள்

இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போர் ஒரு பக்கம் நடக்கும் நிலையில், அதற்கு ஆதரவான லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதலை, தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களில் இஸ்ரேல் ராணுவப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 700 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். 

ஐ.நா. பொதுச்சபையில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன் யாகு, ஹிஸ்புல்லாவை ஒழித்துக்கட்டும் வரை தாக்குதலை நிறுத்த முடியாது என திட்டவட்டமாக கூறினார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1839709297434857753

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback