தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை சின்னம் நாங்கள் தலையிட முடியாது தேர்தல் ஆணையம் தகவல்
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை சின்னம் - தேர்தல் ஆணையம் விளக்கம்
தேர்தல் ஆணையம் தலையிட முடியாது தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை சின்னம் இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக நாங்கள் தலையிட முடியாது
கட்சிக் கொடிகள் மற்றும் அதில் இடம்பெறும் சின்னங்களுக்கு தேர்தல் ஆணையம் எப்போதும் ஒப்புதல் கொடுப்பதில்லை
பிற கட்சிகளின் சின்னங்கள், பெயர்கள் பிரதிபலிக்காமல் கொடி இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அந்தந்த கட்சிகளின் பொறுப்பு யானை சின்னம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில்
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் அதன் கொடியை கடந்த மாதம் அறிமுகம் செய்தார்.
தவெக கொடி சிவப்பு, மஞ்சள் என இரு வண்ணங்களிலும் கொடியின் நடுவில் சிவப்பு நிற வட்டத்தில் வாகை மலரும் 28 நட்சத்திரங்களும் அந்த நட்சத்திரங்கள் நீலம், பச்சை வண்ணத்தில் உள்ளன, மேலும் அதனை இரண்டு ஆண் யானைகள் வணங்குவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை சின்னம் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்த்திற்க்கு புகார் அளித்தது
அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை சின்னம் பகுஜன் சமாஜ் கட்சிக்குச் சொந்தமானது. சட்டப்படி அதைப் பயன்படுத்த முடியாது எனவும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னமாக யானை உள்ளதாகவும், இது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என அதில் குறிப்பிட்டப்பட்டு இருந்தது
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை சின்னம் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகளின் கொடிகளுக்கும் அதில் இடம்பெற்றிருக்கும் உருவங்களுக்கும் ஒப்புதலோ, அங்கீகாரமோ கொடுப்பது தேர்தல் ஆணையம் இல்லை. சின்னங்கள், பெயர்கள் முறையற்ற பயன்பாடு தடுப்புச் சட்டம் 1950க்கு உட்பட்ட வகையில் இருப்பது அரசியல் கட்சிகளின் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கொடிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை அந்தந்தக் கட்சிகள் உறுதிசெய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் தேர்தலில் தவெக கொடியை பயன்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என சொல்லப்படுகிறது.
Tags: அரசியல் செய்திகள்