சாத்தூர் அருகே பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீவிபத்து அலறியடித்து ஓடிய பொதுமக்கள் வைரல் வீடியோ
சாத்தூர் அருகே பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீவிபத்து அலறியடித்து ஓடிய பொதுமக்கள் வைரல் வீடியோ
சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி கிராமத்தில் வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலையில் சுமார் 40 தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்ததாகத் தகவல்.
விபத்து ஏற்பட்டவுடன் தொழிலாளர்கள் பலர் அலறியடித்து ஓடிய நிலையில் மற்ற தொழிலாளர்கள் நிலையை அறிவதில் சிக்கல்!
4 மணிநேரத்திற்கும் மேலாக பட்டாசுகள் வெடித்துக் கொண்டிருப்பதால் யாரும் அருகில் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.
4 தீயணைப்பு வாகனங்கள், 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்றில் இன்று அதிகாலையிலேயே அதிர்ச்சியளிக்கும் விதமாக பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்ட வீடியோ வெளியாகி பதைபதைக்க வைக்கிறது.
இந்த வெடிவிபத்து காரணமாக சுமார் 15 கி.மீ சுற்றளவுக்கு பயங்கர அதிர்வு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். பட்டாசு ஆலையில் தொடர்ந்து வெடிகள் வெடித்து வருவதால் உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து சேர்ந்தன. சம்பவ இடத்திற்கு சாத்தூர் டிஎஸ்பி மற்றும் ஏராளமான போலீசார் குவிந்துள்ளனர்.
வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலைக்கு அருகே பொதுமக்கள் குவிந்த நிலையில், தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து வருவதால் அங்கிருந்த பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தொழிற்சாலையில் தீவிபத்து அலறியடித்து ஓடிய பொதுமக்கள் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1839914725976748172
Tags: தமிழக செய்திகள்