Breaking News

இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டது எப்படி வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் கொல்லப்பட்ட வைரல் வீடியோ 

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகம் மீது டன் கணக்கான எடைகொண்ட பதுங்கு குழி குண்டுகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி உள்ளது

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா உள்ளிட்ட 16 கமாண்டர்களும் உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது

தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் தலைமை அலுவலகத்துக்கு அடியில் பிரம்மாண்ட சுரங்க வீடு இருக்கிறது. அந்த சுரங்க வீட்டில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து இஸ்ரேல் விமானப் படையின் போர் விமானங்கள், பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் சுரங்கப் பாதைகள், சுரங்க வீடுகளை அழிக்கும் திறன் கொண்ட அதிநவீன குண்டுகளை கடந்த 27-ம் தேதி இரவுவீசியது. 

Hasan Nasrallah

சுமார் 6 அடுக்குமாடி கட்டிடங்களை குறிவைத்து 80 டன் எடை கொண்டகுண்டுகள் வீசப்பட்டன. இதில் 6 கட்டிடங்களும் தரைமட்டமாகின. பூமிக்கு அடியில் பல மீட்டர் ஆழத்துக்கு குண்டுகள் துளைத்துச் சென்றன. இஸ்ரேல் விமானப் படையின் இந்ததாக்குதலில் சுரங்க வீட்டில் பதுங்கியிருந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். 

அவரோடு தங்கியிருந்த அவரது மகள் ஜைனபும் உயிரிழந்தார். இருவரின் உயிரிழப்பை இஸ்ரேல் ராணுவமும் ஹிஸ்புல்லா அமைப்பும் உறுதி செய்துள்ளன.இந்த வீடியோ இனையத்தில் வைரல் ஆகின்றது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1840233950335160377

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback