Breaking News

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் உடல் நிலை கவலைக்கிடம் - மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் உடல் நிலை கவலைக்கிடம் - மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

 


தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவராக இருப்பவர் வெள்ளையன். இவர் நுரையீரல் தொற்று நோய் காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

இந்நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை இன்று (செப்டம்பர் 9) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் நுரையீரல் தொற்று நோய் காரணமாக, வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் சென்னை அமைந்தகரை எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அவருக்கு ஆண்டிபயோடிக் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback