ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவிற்க்கும் சம்பந்தம் இல்லை - காவல்துறை இணை ஆணையர் விளக்கம்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சீசிங் ராஜா நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இன்று காலை விசாரணைக்கு அழைத்து சென்ற போது போலீசாரை தாக்கி துப்பாக்கியால் சுட முயன்ற போது போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பாக காவல் துறை இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்
Rowdy Seizing Raja |
சீசிங் ராஜா துப்பாக்கியால் இன்ஸ்பெக்டரை நோக்கி சுட்டுள்ளார். ஆனால் அந்த குண்டானது இன்ஸ்பெக்டர் மீது படவில்லை. தற்காப்புக்காக அருகில் இருந்த மற்றொரு இன்ஸ்பெக்டர் சுட்டுள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்குகள் உள்பட 39 வழக்குகள் இருக்கின்றன. இவர் மீது 10 வாரண்ட்கள் உள்ளன. எந்த ஒரு வழக்கிலும் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார்.நாங்கள் விசாரித்த வரை ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கும் இவருக்கும் சம்பந்தமில்லை.தற்காப்புக்காக சுடப்பட்டதில் தான் உயிரிழந்தார்.மேலும் இது தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம். விரிவான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என அவர் கூறினார்.
Tags: தமிழக செய்திகள்