அரசுப் பள்ளிகளில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சை பேச்சு வீடியோ பார்க்க
அட்மின் மீடியா
0
அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சை பள்ளி கல்வி துறை விசாரனை நடத்த உத்தரவு முழு விவரம்
தன்னம்பிக்கை சொற்பொழிவு என்ற பெயரில் கல்விக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத கருத்துகளை பேசிய நபர் - பள்ளிக்கல்வித்துறை விசாரணை
சென்னையில் அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற அடிப்படையில் சொற்பொழிவை நடத்த திருப்பூர் மாவட்டத்தில் பரம்பொருள் அறக்கட்டளை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர் அழைத்துவரப்பட்டுள்ளார்.
அவர் உரையாற்றும்போது முழுக்க முழுக்க ஆன்மீகம் மறுபிறவி தொடர்பான கருத்துக்களையும் மந்திரம் சொன்னால் போதும் அனைத்தும் நடக்கும் என அவர் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆசிரியர் ஒருவர் குறுக்கிட்டு இது மாணவர்களுக்கான மோட்டிவேஷனல் பேச்சா அல்லது ஆன்மீக சொற்பொழிவா? மறு பிறவி பற்றி பேசுறீங்க, கர்மா பற்றி பேசுறீங்க” என்று அந்த ஆசிரியர் கேட்டதும் உங்கள் பெயரை சொல்லுங்கள் என்று உரத்த குரலில் அவர் கேட்கிறார்.
இது தப்பு’ என்று அந்த ஆசிரியர் சொல்கிறார். மறுபிறவி பற்றி ஏன் சொல்கிறீர்கள் என்று அந்த ஆசிரியர் கேட்டதற்கு விதண்டாவாதமாக அந்த சொற்பொழிவாளர் ஆசிரியரிடம் கேட்கிறார்.இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரல் ஆனதை தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
ஏற்கனவே அனைத்துலக முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அண்மையில் தமிழகத்தில் சில பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது ஆகியவை சர்ச்சையை ஏற்படுத்தி, அதற்கான விளக்கங்களை தமிழக அரசு கொடுத்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது இந்த ஆன்மீக சொற்பொழிவு சம்பவம்.
திராவிட மாடல் ஆட்சி என தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கூறி வரும் நிலையில், பகுத்தறிவுக்கு ஒவ்வாத, அறிவியல்பூர்வமற்ற சிந்தனைகளை மாணவ மாணவிகள் மனதில் விதைத்து, அவர்களின் கவனத்தை திசைதிருப்பும் செயலில் ஈடுபடுவதை தமிழக அரசு அரசுப் பள்ளிகளிலேயே அனுமதிக்கலாமா என நெட்டிசன்கள், பொதுமக்கள் கொந்தளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து முழுமையாக விசாரணை தொடங்கி இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கல்விக்கு சம்பந்தம் இல்லாத; உரிய அனுமதி இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளையும் அரசுப் பள்ளிகளில் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1831935770476908740
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்