Breaking News

திருவள்ளூர் மாவட்டம் தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம் : திருவள்ளூர் ஆட்சியர் நடவடிக்கை முழு விவரம்

அட்மின் மீடியா
0

திருவள்ளூர் மாவட்டம் தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம் : திருவள்ளூர் ஆட்சியர் நடவடிக்கை முழு விவரம் Regarding the removal from the post of Panchayat Council Chairman.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:-

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவர் திரு.P.வெங்கடேசன் பல்வேறு நிகழ்வுகளில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ல் தெரிவிக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவருக்கு விதிக்கப்பட்ட சட்டப்படியான கடமையிலிருந்து தவறியது. ஊராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியது மற்றும் அரசு விதிமுறைகளையும் சட்ட விதிமுறைகளையும் மீறி தன்னிச்சையாக செயல்பட்டது நிரூபணமாவதால் 

இவர் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டால் ஊராட்சிக்கு பெருமளவு நிதியிழப்பு ஏற்படுத்துவதுடன் தனது அதிகாரத்தினை மேலும் துஷ்பிரயோகம் செய்வார் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (11)-ல் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவர் திரு.P.வெங்கடேசன் என்பவரை 03.09.2024 அன்று முதல் ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்,த,பிரபுசங்கர் இ.ஆ.ப. அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2024/09/2024090591.pdf

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback