நெல்லை, தென்காசியில் நில அதிர்வு? மக்கள் அதிர்ச்சி
அட்மின் மீடியா
0
நெல்லை, தென்காசியில் நில அதிர்வு முழு விவரம் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்களிடையே பீதி நிலவுகிறது.
நெல்லை மாவட்டம் பாபநாசம், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய பகுதிகளிலும்,
தென்காசி மாவட்டம் கடையம், ஆழ்வார்குறிச்சி பொட்டல்புதூர், வாகைக்குளம், மதினா நகர், போன்ற இடங்களில் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காலை 11.55 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன ஆனால் தற்போது வரை அரசின் நில அதிர்வியல் இணையதளத்தில் பதிவுகள் எதுவும் வரவில்லை. கள அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்