Breaking News

கடையநல்லூரில் முஸ்லிம்கள் ரயிலைக் கவிழ்க்க சதி என பரவும் வதந்தி! தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்

அட்மின் மீடியா
0

கடையநல்லூரில் முஸ்லிம்கள் ரயிலைக் கவிழ்க்க சதி என பரவும் வதந்தி! தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தண்டவாளத்தில் பாறாங்கல் கல் மீது அந்த வழியில் சென்றுகொண்டிருந்த பொதிகை எக்ஸ்பிரஸ் இரயில்மோதியது. அதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் 

வதந்தி 

கடையநல்லூரில் தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து ரயிலைக் கவிழ்க்க இஸ்லாமியர்கள் சதி செய்ததாக சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது. 

உண்மை என்ன

இது வெறுப்பைப் பரப்பும் வதந்தி. 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சென்றுகொண்டிருந்த பொதிகை எக்ஸ்பிரஸ் இரயில், தண்டவாளத்தில் கிடந்த கல்லில் மோதியது. 

இது தொடர்பாக இரயில்வே காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. "தண்டவாளத்தில் கல் வைத்தது யார் என்று இதுவரை கண்டுபிடிக்கவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் யாரையும் கைது செய்யவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது' என்று இரயில்வே காவல்துறை விளக்கமளித்துள்ளது. 

தண்டவாளத்தில் கல் வைத்தவர்களைக் கண்டறியாத சூழ்நிலையில் முஸ்லிம்கள் இரயிலைக் கவிழ்க்கச் சதி என்று வதந்தியைப் பரப்பி வருகின்றனர். வதந்தி பரப்புவது சட்டப்படி குற்றம்! என தமிழக அரசின் உணமை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது


Tags: FACT CHECK தமிழக செய்திகள் மறுப்பு செய்தி

Give Us Your Feedback