Breaking News

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்தில் கைதான இயக்குநர் மோகனை ஜாமீனில் விடுவித்த நீதிபதி நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்தில் கைதான இயக்குநர் மோகனை சொந்த ஜாமீனில் விடுவித்த நீதிபதி நடந்தது என்ன முழு விவரம்

பழனி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு இயக்குநர் மோகன் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

பிரபல திரைப்பட இயக்குனர் திரௌபதி மோகன் ஜி, இன்று தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய திரைப்படங்களை இயக்கி வழங்கிய இயக்குனர் மோகன் ஜி 

இவர் சமீபத்தில் பழனி பஞ்சாமிருதத்தில் சர்ச்சைக்குரிய பொருள் ஒன்று இருப்பதாகவும் பேசி இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ  சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 

ஏற்கனவே அமைச்சர் சேகர் பாபு பழனியில் பஞ்சாமிருதத்திற்கு ஆவின் நெய் மட்டுமே கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினால், உரிய சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என எச்சரிக்கை விடுத்து இருந்தார். 

இதனிடையே, மோகன் ஜியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பழனியில் காவல் நிலையத்தில் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை தனிப்படை காவலர்கள் சென்னை சென்று மோகன் ஜியை கைது செய்து திருச்சி அழைத்துச் சென்றனர்

இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்த்க்குறிப்பில்:-

இந்து மதத்தினரையும், இந்து மக்களையும் புண்படுத்தும் விதமாக பேசிய தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கைது. 

திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள இந்து அறநிலையத்துறையில் மேலாளராக பணிபுரிந்து வரும் திரு.கவியரசு, அவர்கள், கொடுத்த புகாரில், கடந்த 21.09.2024-ஆம் தேதி மதியம் 01.00 அளவில் தான் பணியில் இருந்த போது. பக்தர்கள் சிலர் இந்து மதத்தையும், இந்து கோவில்களை பற்றியும் தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி அவர்கள் பேசியதாக பேசிக்கொண்டிருந்தனர். 

இதனை தொடர்ந்து எனது செல்போனை பார்த்தபோது, IBC Youtube வளைதளத்தில் உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள் என்ன இளிச்சவாயர்களா என்ற தலைப்பில்" அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயவிலில், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை பயன்படுத்துவதாக, 

உண்மைக்கு புறம்பான விமர்சனம் செய்து, கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளதாகவும். தற்சமயம் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் அசைவ பொருட்களான மீன் எண்ணெய்யும். மாட்டு கொழுப்பும் கலந்து உள்ளதாக கூறப்படும் விவகாரம் அடங்குவதற்குள். தமிழக மக்களிடையே மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும். பொய்யான செய்தி பரப்பியதாக. 

தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி. 39/24, த.பெ.குணசேகரன், பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை-21. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கொடுத்த புகாரின் பேரில் சமயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து. மேற்படி நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளார்.என அறிக்கை வெளிட்டனர்

 சொந்த ஜாமீனில் விடுவித்த நீதிபதி

இந்த வழக்கில் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இயக்குநர் மோகன் ஆஜர்படுத்தப்பட்டார். முறையான சட்ட முறைகள் கைதின் போது, பின்பற்றப்படவில்லை எனக்கூறி திருச்சி நீதிமன்ற நீதிபதி இயக்குனர் மோகனை சொந்த ஜாமினில் விடுவித்தார். புகார் குறித்து வழக்குப்பதிவு செய்தது சரியே, ஆனால் கைது சட்டவிரோதம் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback