வியட்நாமில் திடீரென இடிந்து விழுந்த பாலம் ஆற்றில் கவிழ்ந்த லாரி வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
வியட்நாமில் திடீரென இடிந்து விழுந்த பாலம் ஆற்றில் கவிழ்ந்த லாரி வைரல் வீடியோ
வியட்நாமை தாக்கிய யாகி புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் வடக்கு ஃபூ தோ மாகாணத்தில் சிவப்பு ஆற்றின் மீது கட்டபட்ட இரும்பு பாலம் வாகனங்கள் செல்லும் போதே இடிந்து விழுந்த வீடியோ
பிலிப்பைன்சில்
உருவான யாகி புயல் சீனாவை தொடர்ந்து வியட்நாமை மிரட்டியது. வடக்கு
வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை
குறிவைத்து யாகி புயல் வீசியது.
மணிக்கு
149 கி.மீ வேகத்தில் காற்று வீசி தலைநகர் ஹனோயில் யாகி புயல் கரையை
கடந்தது. வியட்நாமில் இந்த நூற்றாண்டின் மிக பயங்கரமான புயலாக கருதப்படும்
இந்த யாகி, அந்த நாட்டை முழுவதுமாக உலுக்கியது.
புயல்
வீச்சை தொடர்ந்து அங்கு இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால்
அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்து வெள்ளம் பெருக்கெடுத்து
ஓடுகிறது.
கனமழை
காரணமாக அங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு வெள்ளம் புகுந்தது. இதனால்
வீடுகள், பள்ளிகள் உள்பட கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவை நீரில்
தத்தளித்து வருகின்றன
புயல்
காரணமாக அங்குள்ள மின்கம்பங்கள், ராட்சத மரங்கள் ஆகியவை வேரோடு பிடுங்கி
தூக்கி வீசப்பட்டன. இதனால் அங்கு மின்சாரம், குடிநீர், இணைய சேவை உள்ளிட்ட
முக்கிய அம்சங்கள் தடைப்பட்டது. மேலும் அங்குள்ள சாங் போ நகரில் திடீர்
நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.
இந்தநிலையில்
அங்குள்ள மலைபாங்கான காவ் பாங் மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும்
ஆற்றின் குறுங்கே கட்டப்பட்டிருந்த இரும்பு பாலம் ஒன்று இரண்டு தூண்டுகளாக
உடைந்து ஒரு பகுதி ஆற்றில் மூழ்கியது. அப்போது அந்த பாலத்தில் சென்று
கொண்டிருந்த பஸ் ஒன்று ஆற்றில் விழுந்து வெள்ளத்தில் அடித்து
செல்லப்பட்டது. இந்த பஸ்சில் பயணித்த 20 பேரும் ஆற்றில் மூழ்கி
உயிரிழந்தனர்.
தகவலறிந்த
மீட்புத்துறையினர் பஸ் பயணிகளின் உடல்களை மீட்கும் பணியில் தீவிரமாக
ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் வியட்நாமில் புயல் பாதிப்புக்கு பலியானோர்
எண்ணிக்கை தற்போது 64 ஆக உயர்ந்ததாக அந்த நாட்டின் பேரிடர் நிர்வாகம் தகவல்
அளித்துள்ளது.
வியட்நாமை சனிக்கிழமை தாக்கிய யாகி என்ற சூறாவளி புயல் பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1833135728340922491
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ