Breaking News

மதுரை மகா என்ற ஸ்டாண்ட் அப் காமெடியன் மகா விஷ்ணுவாக மாறிய கதை முழு விவரம்

அட்மின் மீடியா
0

மதுரை மகா என்ற ஸ்டாண்ட் அப் காமெடியன் மகா விஷ்ணுவாக மாறிய கதை முழு விவரம்

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்களுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகத்தினர் அழைத்துள்ளனர். 

ஆனால் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மாணவ மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத்திறனாளிகளாக, ஏழைகளாக இருக்கிறார்கள் என்றும், இந்த ஜென்மத்தில் கண், கை, கால் இல்லாமல் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன் சொற்பொழிவு ஆற்றிய மகா விஷ்ணுவின் பேச்சுக்கு அங்கிருந்த பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கண்டனம் தெரிவித்தார் .  

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவிடம்  சைதாப்பேட்டை உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் விமான நிலையத்தில் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர் அதன்பின்பு  மகா விஷ்ணுமீது 5 பிரிவுகள் கீழ் வழக்குபதிவுகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் செப்.20 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இந்நி்லையில், மகா விஷ்ணு யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

1994-ம் ஆண்டு மதுரை அலங்காநல்லூரில் பிறந்த இவர், சிறுவயதில், சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் அறிமுகமாகியவர் தன்னை ஒரு ஆன்மீக பேச்சாராக மாற்றிக்கொண்டு  கடந்த 2021-ம் ஆண்டு திருப்பூரில் பரம்பொருள் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி ஆன்மீக தேடலுக்கான வழிகாட்டுவதாக கூறி கட்டண வகுப்புகளை நடத்தியுள்ளார்.

ஆன்மீக சொற்பொழிவாளராக மாறிய மகா விஷ்ணு ஸ்ரெஸ் ப்ரி என்ற பெயரில், ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில், வகுப்புகள் நடத்தி வருகிறார்.

பத்தாம் வகுப்பு படித்துவிட்டு சித்த மருத்துவம் படித்து இருப்பதாக கூறி காயகல்ப லேகியம் விற்பனையும் செய்து இருக்கிறார் மகா விஷ்ணு என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது

மகாவிஷ்ணு தயாரித்துள்ள "நான் செய்த குறும்பு" என்ற திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளி வருகிறது.  மேலும் ஏழை எளிய மாணவர்களின் படிப்புக்கு உதவுவதாக கூறி, பள்ளி பாடநூல்களில் வள்ளலார் இயற்றிய திருவருட்பாவை சேர்க்க வலியுறுத்தி, அமைச்சர்கள், அன்பில் மகேஷ், மனோ தங்கராஜ், மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி ஆகியோரை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback