ஹோட்டலில் விற்க்கப்பட்ட அரசு சத்துணவு முட்டைகள் ஹோட்டலுக்கு சீல் முழு விவரம்
அட்மின் மீடியா
0
ஹோட்டலில் விற்க்கப்பட்ட அரசு சத்துணவு முட்டைகள் ஹோட்டலுக்கு சீல் முழு விவரம்
துறையூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் தனியார் உணவகத்தில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் உணவுகளாக விற்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், துணை வட்டாட்சியர் மோகன் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சத்துணவு முட்டையை விற்பனை செய்த தனியார் உணவகத்திற்கு சீல் வைத்தனர்.
மேலும் முட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அது மட்டுமல்லாமல், ஹோட்டல் உரிமையாளரான ரத்னத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்