Breaking News

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய உத்தரவு முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய உத்தரவு முழு விவரம் இதோ



சென்னையை தவிர தமிழகம் முழுவதும் வாக்கு பெட்டிகளை தயார் நிலையில் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

கடந்த 2019 ஆம் ஆண்டில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வார்டு வரையறை பிரச்சினை, எல்லை தீர்மானம் உள்ளிட்ட காரணமாக ஒன்பது மாவட்டங்களில் 21 மாதங்கள் கழித்து தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்ற தலைவர், வார்டு கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்டவர்களின் பதவிக்காலம் வரும் ஜனவரி 5ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. 

தற்போது சில மாவட்டங்களில் கிராமங்களை , பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுடன் இணைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இதனால் உள்ளாட்சித் தேர்தலை ஒட்டுமொத்தமாக 2026 இல் நடத்தலாம் என திமுக தலைமை திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில் சென்னையை தவிர தமிழக முழுவதும் வாக்கு பெட்டிகளை தயார் நிலையில் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக தேர்தல் ஆணைய செயலாளர் 

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிர்வரும் சாதாரண / தற்செயல் தேர்தல்களை முன்னிட்டு தேர்தல்களுக்கு தேவையான அனைத்து வகையான வாக்குப்பதிவு பொருட்களையும் தயார் நிலையில் வைப்பது மிகவும் அவசியமாகிறது.

இதில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைக்கவேண்டும். எனவே. ஊரக உள்ளாட்சித் தேர்தல்களுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வகையான வாக்குப்பெட்டிகள் (Ballot Boxes) தற்போதைய தரம் மற்றும் நிலையை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நேரடியாக வாக்குப்பெட்டிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து அவைகளின் தன்மையினை ஆராய்ந்து அதாவது வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தும் வகையில் நல்ல நிலையில் உள்ளவை, சிறிதளவு பழுதடைந்து அதனை சரி செய்வதன் மூலம் வாக்குப்பதிவிற்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளவை.முழுவதும் பழுதடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளவை என வகை பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும். 

வாக்குப்பெட்டிகளில் உள்ள சிறு பழுதுகளை சரிசெய்வதற்கும் மற்றும் சுத்தம் செய்து எண்ணெயிடும் பணிக்கு செலவு மதிப்பீடு, வாக்குப் பெட்டி ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.21. (ரூபாய் இருபத்தி ஒன்று மட்டும்) பார்வையில் காணும் கடிதத்தில் பொதுபணித் துறை பரிந்துரைத்துள்ளவாறு அனுமதிக்கப்படுகிறது.

மேற்படி தரம் பிரித்து வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டிகளை கீழ்க்காணும் அறிவுரைகளின்படி எதிர்வரும் தேர்தலுக்கு தயார் நிலையில் வைக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக அடுத்த ஆண்டுக்கு முன்னதாகவே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் எனவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback