Breaking News

கேரளா ஏடிஎம்களில் கொள்ளையடித்து கண்டெய்னர் லாரியில் தப்பிய கும்பல் நாமக்கலில் துப்பாக்கிச்சூடு நடத்தி மடக்கிய போலீசார் நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

கேரளா ஏடிஎம்களில் கொள்ளையடித்து கண்டெய்னர் லாரியில் தப்பிய கும்பல் நாமக்கலில் துப்பாக்கிச்சூடு நடத்தி மடக்கிய போலீசார் நடந்தது என்ன முழு விவரம் 

கேரளாவில் ஏடிஎம்களில் கொள்ளையடித்து தப்பிய கும்பல், நாமக்கல் அருகே பிடிபட்டது


கண்டெய்னரை திறக்கும் போது உள்ளே ஆயுதங்களுடன் இருந்த கொள்ளைக் கும்பல் காவல் ஆய்வாளரை தாக்கியதால் துப்பாக்கிசூடு  துப்பாக்கிச்சூட்டில் கொள்ளைக் கும்பலில் ஒருவர் உயிரிழப்பு 2 பேர் பிடிபட்டனர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் பகுதியில் இன்று காலை ஒரு கண்டெய்னர் லாரி வேகமாக சென்றது. அப்போது பள்ளிக்கு வந்த குழந்தைகள் மீது மோதும் வகையில் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து அங்கிருந்த இரண்டு கார்கள், 4 இரு சக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. 

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற போது வாகனத்தை நிறுத்தாமல் வாகன ஓட்டி வேகமாக சென்றுள்ளார். 

ஒருகட்டத்தில் கண்டெய்னர்  லாரியை சாலையின் நடுவில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து போலீசார் கண்டெய்னரை திறக்கும் போது அதில் ஒரு காரும் சில வட மாநில இளைஞர்கள் துப்பாக்கியுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கண்டெய்னர் கதவை மூடிவிட்டு மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த கண்காணிப்பாளர் அதிரடி படையினருடன் வந்து வாகனத்தை சுற்றிய வளைத்து கண்டெய்னரை திறக்கும் போது உள்ளே இருந்த கொள்ளையர்கள், போலீசாரை நோக்கி  துப்பாக்கிச்சூடு நடத்த போலீசாரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழப்பு, 4 பேர் கைது, ஒருவர் தப்பியோட்டம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது

மேலும் பிடிபட்ட அனைவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ககண்டெய்னருக்குள் கேரள ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.66 லட்சம் பணம் இருந்துள்ளது மேலும் ஒரு காரும் இருந்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback