Breaking News

சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை செய்து சூட்கேஸில் அடைத்து சாலையோரம் வீசீய நபர் கைது முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை துரைப்பாக்கத்தில் இளம்பெண்ணை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் போட்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 


பெண்ணை கொலை செய்து உடலைத் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து சாலையோரம் வீசப்பட்ட கொடூரம்

சென்னை அடுத்த துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு பகுதியில் ரத்த கரைகளுடன் சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது இது குறித்து தகவலின் அடிப்படையில் துரைப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரத்த கரைகளுடன் இருந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது பெண் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து வீசி சென்றது தெரியவந்துள்ளது.

உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணை நடத்தியதில் சென்னை மணலி பகுதியில் திருமணம் ஆகாத 32 வயது மதிக்கத்தக்க தீபா என்ற பெண் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது.மேலும் கொலை செய்யப்பட்டு இருக்கும் உடல் தீபா என்பதும் போலீசார் விசாரனையில் தெரியவந்துள்ளது.

மேலும் தீபா எதற்காக கொலை செய்யப்பட்டார் கொலை செய்த நபர்கள் தீபாவின் உடலை சூட்கேஸில் அடைத்து போட்டுச் சென்றது குறித்தும் தடய அறிவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வந்த நிலையில் விசாரணையில் முதற்கட்டமாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன்(25) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

போலீசார் நடத்திய விசாரனையில்:-

பாலியல் தொழிலாளியான தீபாவுக்கு 35 வயதாகியும் இன்னும் கல்யாணமாகவில்லை இதனால் கடந்த 18ம் தேதி இரவு பாலியல் தொழிலாளியான தீபாவை  தன்னுடைய வீட்டில் 3 நாட்களுக்கு யாரும் இல்லை என்று சொல்லி தீபாவை அழைத்திருக்கிறார்

அழைப்பதற்கு முன்பு 6000 ரூபாய் கேட்டதாகவும், பின்னர் 12,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என அப்பெண் மணிகண்டனிடம் சண்டை போட்டதால் கோபத்தில் சுத்தியலால் தீபாவின் தலையில் அடித்துள்ளார் அதில் இறந்த தீபாவின் உடலை சூட்கேஸ் வாங்கி அதில் வெட்டி போட்டு  சூட்கேஸை கொண்டுபோய் வீசிவிட்டு, மறுபடியும் வீட்டிற்கு வந்துவிட்டேன் என கூறியுள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback