திருக்கழுக்குன்றம் அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி சட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு
திருக்கழுக்குன்றம் அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி சட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த அணுபுரம் பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரன் இவரது மகள் நிஷாந்தினி(23) பல்லாவரம் அருகே உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார்.
இந்நிலையில் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தபோது திருக்கழுக்குன்றம் அருகே கல்பாக்கம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்தும் மாணவியின் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இதில் இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி தலையில் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து சம்பவம் அறிந்து வந்த திருக்கழுக்குன்றம் போலீஸார், மாணவியின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, திருக்கழுக்குன்றம் போலீஸார்
வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்