லட்டு தயாரிக்க விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டது என்பதற்கு எந்த தெளிவான ஆதாரம் இல்லை சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!
அட்மின் மீடியா
0
லட்டு தயாரிக்க விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டது என்பதற்கு எந்த தெளிவான ஆதாரங்களும் இல்லை சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!
திருப்பதி லட்டு தயாரிக்க விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டது என்பதற்கு எந்த தெளிவான ஆதாரங்களும் இல்லை முழுமையாக அறிக்கை எதுவும் இல்லாத நிலையில் அவசரமாக செய்தியை வெளியிட காரணம் என்ன என்று ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிமாற்றம் ஏற்பட்டு சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆன பிறகு திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்படும் நெய்யை பரிசோதனை செய்யுமாறு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
ஆய்வு முடிவில் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த நெய்யில் மீன் எண்ணெய், மாடு கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவராகம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டி சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது அப்போது
- திருப்பதியில் லட்டு தயாரிக்க விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டது என்பதற்கு எந்த தெளிவான ஆதாரங்களும் இல்லை
- முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு கடவுளை வைத்து அரசியல் செய்யக் கூடாது
- முழுமையாக அறிக்கை எதுவும் இல்லாத நிலையில் இவ்வளவு அவசரமாக இந்த செய்தியை வெளியிட்ட காரணம் என்ன?
- முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது எனில் பத்திரிகைகளுக்கு ஏன் செல்ல வேண்டும்?
- திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய்தான் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்?
- கலப்படம் செய்யப்பட்டதாக கூறப்படும் நெய், திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்பட்டதா என்பது தெளிவுபடுத்தப் படவில்லை
உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வியுடன் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருப்பதி லட்டு விவகாரத்தில் எந்த முறையான ஆதாரமும் இல்லாமல், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவசரமாக பொதுவெளியில் வந்து குற்றச்சாட்டு வைத்தது தேவையில்லாத விசயம்என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்