Breaking News

மகளின் தலையில் சிசிடிவி கேமரா வைத்த தந்தை வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

மகளின் தலையில் சிசிடிவி கேமரா வைத்த தந்தை வைரல் வீடியோ

பாகிஸ்தானை சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகள் எங்கு சென்றாலும் அதை கண்காணிக்க, மகளின் தலையில் ஒரு சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். அதை எங்கிருந்து வேண்டுமானாலும் அவர் தனது மொபைல் போன் மூலமாக 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும். அந்த பெண் பாகிஸ்தானின் தெருக்களில் தினம்தோறும் தலையில் சிசிடிவி பொருத்திய நிலையில் செல்வது அப்பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது

அதை தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் அந்த பெண்ணை பேட்டி எடுத்தார். அப்போது 

தனது தந்தை எது செய்தாலும் தனது நலனுக்காகதான் செய்வார் என்றும், அதனால் தந்தையின் முடிவுக்கு தான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். அந்த வீடியோவிலும் கூட அவர் தலையில் சிசிடிவி கேமராவுடனே உள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/ikpsgill1/status/1832019887281021219

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback