Breaking News

அரசு காப்பக குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை என பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

அட்மின் மீடியா
0

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில்  உள்ள குழந்தைகளிடம் மனநல ஆலோசனை வழங்குவதாக கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக மனநல ஆலோசகர் சத்தியபிரகேஷ் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாமந்தான்பேட்டையில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் 65-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகிறார்கள். 

இந்த நிலையில்   விடுதி கண்காணிப்பாளர் சசிகலா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகளுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மனநல ஆலோசகர் சத்திய பிரகாஷ் மீது புகார் கொடுத்தார்.

இதையடுத்து நாகை அரசு காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் கொடுத்த மனநல ஆலோசகர் சத்யபிரகாஷ்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

குழந்தைகள் காப்பகத்தில் பெண் மன நல ஆலோகரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எழிலரசி தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback