Breaking News

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு! முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி சிங் தேர்வு! முழு விவரம் இதோ Atishi Marlena has been appointed as the new Chief Minister of Delhi

டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ள நிலையில், புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்தநிலையில் தற்போது டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

இதில் டெல்லியின் புதிய முதல்அமைச்சராக அதிஷி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். 43 வயதான அதிஷியை டெல்லி முதலமைச்சர் பதவிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்துள்ளார்.

மேலும் டெல்லி முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை ராஜினாமா செய்கிறார். ஆளுநரை மாலை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்கும் கெஜ்ரிவால், சட்டமன்ற கட்சி தலைவர் தேர்வான விவரத்தையும் அளிப்பார் என கூறப்படுகிறது. மேலும், டெல்லி சட்டமன்றம் செப்.26 மற்றும் 27ம் தேதி கூடும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback