நேபாள் நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு வீடியோக்கள் பார்க்க
நேபாளத்தில் பெய்து வரும் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் அந்நாடு வெள்ளத்தில் மிதப்பதுடன், பல்வேறு இடங்களிலும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது.இன்னும் பலர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் 44 நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் கடந்த மூன்று நாள்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகரில் ஒருசில பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளால் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது. வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் குடியிருப்பாளர்கள் மேல் தளங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மழை காரணமாக காத்மாண்டுவின் பெரும்பாலான பகுதகளில் மின்சாரமும் இணையமும் துண்டிக்கப்பட்டது.நெடுஞ்சாலைகளில் இரவில் பேருந்துகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை, மீட்பு பணியாளர்கள், ஹெலிகாப்டர்கள்
மற்றும் ரப்பர் படகு மூலம் காப்பாற்றி வருகின்றனர்.இவ்வாறு அவர்கள்
தெரிவித்தனர்.கனமழை, நாளை காலை வரை தொடரும் என அந்நாட்டு வானிலை மையம்
தெரிவித்துள்ளது
கடுமையான வானிலையால் முக்கிய சாலைகள் முடக்கப்பட்டது. சர்வதேச விமான சேவை இயக்கப்பட்டாலும், உள்நாட்டு விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்https://x.com/adminmedia1/status/1840369158069895303
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1840356009534947793
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1840355791129210979
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1840355566389956628
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1840355429299138818
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ