Breaking News

BREAKING ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14 வரை நீட்டிப்பு aadhaar update last date

அட்மின் மீடியா
0
ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14 வரை நீட்டிப்பு


ஆதார் கார்டை கட்டணமின்றி புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14 வரை நீட்டிப்பு செய்து ஆதார் ஆணையம் அறிவித்துள்ளதுகட்டணம் செலுத்தாமல் ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை மறுநாளுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 3 மாத கால அவகாசம் தரப்பட்டுள்ளது.

ஆதார் தொடர்பான மோசடிகளை தடுக்க, ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஒழுங்குமுறை விதிகளை கடந்த 2016-ம் ஆண்டு ஆதார் ஆணையம் கொண்டு வந்தது.இதன்படி ஆதார் அட்டை வைத்திருக்கும் நபர்கள், ஆதார் பதிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை சமீபத்திய தகவல்களுடன் புதுப்பிக்க வேண்டும்.

அந்த அடிப்படையில், ஆதார் அட்டைகளை புதுப்பிக்க ஆதார் ஆணையம் மக்களை அறிவுறுத்தி வருகிறது. ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, புகைப்படம் போன்ற விவரங்களை புதுப்பித்துக்கொள்ள வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வங்கிக்கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணங்களுடன் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு ஆதாரை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுபித்தால்  ரூ.50/- கட்டணமாக வசூலிக்கப்படும். 

ஆனால், தற்போது, இந்த சேவையை 14.12.2024 வரை இலவசமாக மைஆதார் 'my Aadhaar' எனும் இணையத்தில் அப்டேட் செய்யலாம் என ஆதார் ஆணயம் அறிவித்துள்ளது

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback