Breaking News

கார் விபத்து - மனைவியுடன் உயிர் தப்பிய நடிகர் ஜீவா நடந்தது என்ன முழு விவரம் Car accident - actor Jeeva who survived with his wife,

அட்மின் மீடியா
0

கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே நடிகர் ஜீவா தனது மனைவியுடன் சென்ற கார் விபத்துக்குள்ளானது Car accident - actor Jeeva who survived with his wife,

இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் நடிகர் ஜீவா சென்ற கார் சாலையின் தடுப்பில் மோதியது 

இதில் நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

 


நடிகர் ஜீவா தனது மனைவியுடன் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனது காரில் சென்று கொண்டிருந்தபோது சரியாக கார் கனியாமூர் பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது, காரின் குறுக்கே திடீரென ஒரு பைக் சென்றதால், நிலை தடுமாறிய ஜீவா அந்த நபரின் மீது மோதல் இருக்க காரை திருப்பும்போது சாலையின் நடுவே உள்ள பேரிகேட்டில் மோதி விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி ஆகியோர் உயிர் தப்பினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது.

உடனடியாக ஜீவா அவருடைய நண்பர் ஒருவருக்கு போன் செய்து வேறு ஒரு காரை வரவழைத்து அந்த காரில் அவரே சேலம் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback