Breaking News

அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல, நமது முன்னோர்கள்தான் மத்திய பிரதேச கல்வி மந்திரி பேச்சு Columbus did not discover America

அட்மின் மீடியா
0

அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல, நமது முன்னோர்கள்தான் ம.பி. கல்வி மந்திரி பேச்சு


அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல என்று மத்திய பிரதேச மந்திரி இந்தர் சிங் பர்மர் கூறியுள்ளார்

மத்தியப் பிரதேசத்தில் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அந்த மாநிலத்தின் கல்வி மந்திரி இந்தர் சிங் பர்மர் கலந்து கொண்டு பேசினார். அப்போது

இந்திய மாணவர்களுக்கு தவறான விஷயங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிக்கவில்லை. நமது முன்னோர்கள்தான் கண்டுபிடித்தார்கள். 

8ம் நூற்றாண்டில் இந்தியாவின் மாலுமி அமெரிக்காவிற்கு சென்று அங்கு பல கோயில்களை கட்டினார் என்று எழுதியிருக்க வேண்டும் என்று நான் கூற விரும்புகிறேன். இந்த உண்மைகள் அங்குள்ள அருங்காட்சியகத்தில் இன்னும் எழுதப்பட்டுள்ளன. இந்த உண்மைகள் இன்னும் அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதை நம் மாணவர்களுக்கு நாம் கற்பிக்க வேண்டும்.. அமெரிக்காவை கண்டுபிடித்தது எங்களது இந்திய மூதாதையர்கள். கொலம்பஸ் அல்ல என்பதை மாணவர்களுக்கு சரியாக நம் மாணவர்களுக்கு கற்பித்திருக்க வேண்டும்” என்றார்.

மாணவர்களுக்கு  கற்பிக்க வேண்டுமென்றால் கொலம்பசுக்கு பிந்தைய காலத்தில் மக்கள் எவ்வாறு பழங்குடியினரின் இருப்பிடங்கள் மற்றும் பழங்குடியின சமூகத்தை சித்ரவதை செய்தார்கள் என்பதை கற்பித்திருக்க வேண்டும்.

ஏனென்றால் அந்த சமூகத்தினர் இயற்கையை வணங்குபவர்கள் மற்றும் சூரியனை வணங்குபவர்கள். அவர்கள் எப்படி கொல்லப்பட்டனர். அவர்கள் எப்படி மாற்றப்பட்டனர் என்பதை தெரியப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக சரியான உண்மைகள் கற்பிக்கப்படவில்லை. 

குஜராத்தின் ரான் ஆப் கட்ச் பகுதியில் நடந்த தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் 5,500 ஆண்டுகள் பழமையான இரண்டு பெரிய மைதானங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் விளையாட்டைப் பற்றி விரிவாக அறிந்திருந்தனர். அதற்காக பெரிய மைதானங்களைக் கட்டியுள்ளனர்

சிலைகளை உருவாக்கிய பால் பாகு என்ற இந்திய கட்டிடக் கலைஞரின் உதவியுடன் பெய்ஜிங் நகரம் வடிவமைக்கப்பட்டது. ரிக்வேதத்தை எழுதியவர்கள்தான் பூமி சூரியனை சுற்றி வருகிறது என்று முதலில் கணித்தார்கள். திட்டமிட்டு இந்தியாவின் பலத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியிருக்கிறார்கள் என் அவர் கூறினார்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1834053425291530546

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback