மைசூரு அரண்மனை இரண்டு யானைகள் சண்டையிட்ட பரபரப்பு வீடியோ Dasara Elephants Fight Causes Chaos at Mysore Palace
மைசூரு அரண்மனை இரண்டு யானைகள் சண்டையிட்ட பரபரப்பு வீடியோ
- கர்நாடகா மாநிலம் மைசூர் அரண்மனை வளாகத்தில் தனஞ்சயா மற்றும் காஞ்சன் ஆகிய இரு யானைகளுக்கு இடையே சிறிய மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு
- தசரா ஊர்வலத்துக்காக அழைத்து வரப்பட்ட யானைகள் திடீரென சாலையில் ஓடியதால் பரபரப்பு.
மைசூர் அரண்மனை வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு உணவு உண்ணும் போது தசரா யானைகளான தனஞ்சயா மற்றும் காஞ்சன் ஆகிய இரு யானைகளுக்கு இடையே சிறிய மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தனஞ்சயா யானை, காஞ்சனைத் தாக்கி துரத்த முயன்றது அப்போது காஞ்சன் யானை பாகன் இல்லாமலேயே முகாமிலிருந்து வெளியேறி இரும்பு தடுப்புகளைத் தள்ளிக்கொண்டு மைசூர் அரண்மனையின் ஜெயமார்த்தாண்ட வாயிலில் உள்ள கண்காட்சி சாலையில் ஓடியது
உடனடியாக யானைப்பாகன் சம்பவ இடத்திற்கு ஓடி வந்து யானையை சமாதானப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வந்து முகாமுக்கு அழைத்துச் சென்றார். யானைகள் மோதலால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மைசூர் அரண்மனையில் 2 யானைகளானது திடீரென மோதலில் ஈடுபட்டு மைசூர் வளாகத்தில் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1837407310605439066
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ