திரெளபதி பட இயக்குநர் மோகன் ஜி கைது Director Mohan G has been arrested by TN Police
திரெளபதி பட இயக்குநர் மோகன் ஜி திடீர் கைது Director Mohan G has been arrested by TN Police
பிரபல திரைப்பட இயக்குனர் திரௌபதி மோகன் ஜி, இன்று தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள்ளார்
இன்று காலை இயக்குநர் மோகன் ஜியைக் கைது செய்த காவல் துறையினர், என்ன காரணத்திற்காக கைது செய்திருக்கிறார்கள், எந்த வழக்கில் கைது என்று எந்தவிதமான முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறவில்லை என்று கூறப்படுகிறது.
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய திரைப்படங்களை இயக்கி வழங்கிய இயக்குனர் மோகன் ஜி
மோகன் ஜி, சமீபத்தில் பழனி பஞ்சாமிருதத்தில் சர்ச்சைக்குரிய பொருள் ஒன்று இருப்பதாகவும் பேசி இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
ஏற்கனவே அமைச்சர் சேகர் பாபு பழனியில் பஞ்சாமிருதத்திற்கு ஆவின் நெய் மட்டுமே கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினால், உரிய சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இதனிடையே, மோகன் ஜியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பழனியில் காவல் நிலையத்தில் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை மோகன் ஜியின் காசிமேடு வீட்டிற்கு நேரில் சென்ற காவல் துறையினர், அவரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர்
திரௌபதி பட இயக்குநர் மோகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :
இயக்குனர் நண்பர் திரௌபதி மோகன் அவர்கள் சற்று முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை.
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து எதிர்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கஞ்சா கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இதுமாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாக செய்கிறது என அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்