Breaking News

ஆதாரில் கைரேகையை புதுப்பிக்கவில்லை என்றால் ரேஷனில் பொருட்கள் கொடுக்கமாட்டார்களா உண்மை என்ன don't update fingerprint in Aadhaar, won't they give you ration items

அட்மின் மீடியா
0

ஆதாரில் கைரேகையை புதுப்பிக்கவில்லை என்றால் ரேஷனில் பொருட்கள் கொடுக்கமாட்டார்களா உண்மை என்னWhat is the truth if you don't update your fingerprint in Aadhaar, they won't give you ration items?

 


பரவும் செய்தி:-

ஆதாரில் கைரேகையை புதுப்பிக்கவில்லை என்றால் ரேஷனில் பொருட்கள் கொடுக்கமாட்டார்கள் 

என சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. என்று சமூக 

உண்மை என்ன:-

இது முற்றிலும் பொய்யான தகவல்.  ரேஷன் கடைகளில் கைவிரல்ரேகை/கண்கருவிழி அடையாள சரிபார்ப்பின்போது தோல்வி அடையும் (Authentication failure) குடும்ப அட்டைதாரர்களுக்கு தனியே பதிவேட்டில் கையொப்பம் பெற்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. 

கைவிரல் ரேகை சரிபார்க்காத காரணத்தினால் எந்த குடும்ப அட்டைதாரருக்கும் பொருட்கள் மறுக்கப்படுவதில்லை. 

ஆதார் அட்டை புதுப்பிக்கும் பொருட்டு கண்கருவிழி, கைரேகை மறுபதிவு செய்வதற்கும் நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கும் எவ்வித தொடர்புமில்லை என்று உணவுப்பொருள் வழங்கல் துறை விளக்கமளித்துள்ளது. என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு அறிவித்துள்ளது

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback