Breaking News

தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தி செய்யப்படும் என ஃபோர்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு Ford has officially announced that the car will be manufactured again in Tamil Nadu

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தி செய்யப்படும் என ஃபோர்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு Ford has officially announced that the car will be manufactured again in Tamil Nadu

 

  • தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தி செய்யப்படும் என ஃபோர்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
  • சென்னை அருகே உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் ஏற்றுமதிக்கான கார் உற்பத்தி மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிப்பு.
  • ஏற்கனவே இருந்த 12,000 ஊழியர்களுடன் கூடுதலாக 3,000 ஊழியர்களை பணியில் அமர்த்தவும் முடிவு.

2 நாட்களுக்கு முன் அமெரிக்காவில் ஃபோர்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது, சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தி இருந்தார்.

தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் 17 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டார்

இப்பயணத்தின்போது சிகாகோவில் போர்டு மோட்டார் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, சென்னையில் உள்ள தனது தொழிற்சாலையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க போர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. தொழில் தொடங்குவதற்காக அனுமதி கோரி தமிழக அரசிடம் போர்டு நிறுவனம் கடிதம் அளித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிய போர்டு நிறுவனம் மீண்டும் தனது உற்பத்தியை தொடங்க இருப்பது மாநிலத்தின் வாகனத்துறை சீராக மீண்டும் ஒன்றிணைவதை உறுதி செய்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே இருந்த 12,000 ஊழியர்களுடன் கூடுதலாக 3,000 ஊழியர்களை பணியில் அமர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக போர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback