Breaking News

மலேசிய முன்னாள் பிரதமர் மஹதீர் முஹம்மத் மரணம் என பரவும் வதந்தி உண்மை என்ன Former Malaysian Prime Minister Mahathir is rumored to be dead

அட்மின் மீடியா
0

மலேசிய முன்னாள் பிரதமர் மஹதீர் மரணம் என பரவும் வதந்தி உண்மை என்ன Several social media accounts X uploaded information stating that former Malaysian PM Mahathir Mohamad had died. The information was a hoax.


பரவி வரும் செய்தி:-

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

மலேஷிய முன்னாள் பிரதமர் மஹதீர் முஹம்மத் வபாத்தானார், தான் கட்டிய ஜும்ஆ மஸ்ஜிதில் ஜும்ஆ  தொழுகையை நேற்று நிறைவேற்றியபின் சுகவீனமுற்ற நிலையில் தற்போது வபாத்தாகியுள்ளார். அன்னாருடைய மறுமை வாழ்வுக்காகப் பிரார்த்திப்போம் என சமூக வலைதளங்களில் ஓர் தகவல் பரவி வருகின்றது

உண்மை என்ன:-

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது (வயது 99) 22 ஆண்டுகள் மலேசியாவை ஆட்சி செய்துள்ளார்,மேலும் அவர் தற்போது நலமுடன் உள்ளார் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது

அதாவது அவர் உயிரிழந்துவிட்டார் என செய்திகள் பரவிய நிலையில் அவரது டிவிட்டர் கணக்கில் மலேசியாவில் உள்ள ஒரு வணிக வளாக கட்டிட திறப்பு விழாவில் அவர் இருந்த தருணத்தை மகாதீர் பதிவேற்றியுள்ளார்

மேலும் இந்தோனேசியாவின் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஜிம்லி அஷிதிகி தனது டிவிட்டர் கணக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் இறந்துவிட்டார் என்ற செய்தியைப் பதிவேற்றியுள்ளார் 

பின்னர் சிறிது நேரத்தில் அந்த டிவிட்டர் பதிவை நீக்கி  தவறான தகவலுக்கு மன்னிக்கவும், திரு மகாதீரின் மரணம் குறித்த செய்தி உண்மையல்ல.  என்று மலேசியப் பிரதமர் அலுவலகத்திலிருந்து எனக்கு இப்போதுதான் உறுதியளிக்கப்பட்டது. மன்னிக்கவும், முந்தைய ட்வீட்டைப் புறக்கணிக்கவும்" என்று ஜிம்லி தனது X கணக்கில்பதிவிட்டுள்ளார்.எனவே யாரும் பொய்யான செய்தியினை நம்பாதீர்கள்  

மேலும் இந்தோனேசியாவில் இருந்து வெளியாகும் இணைய பத்திரிக்கையான detikcom மலேசிய பிரதமர் இற்ந்துவிட்டார் என பொய்யான செய்தி பரவுவதாகவும் அவர் உயிருடன் உள்ளார் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/chedetofficial/status/1840256123150176273

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/JimlyAs/status/1840234795688931766

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://news.detik.com/berita/d-7563397/beredar-hoax-meninggal-mahathir-hadiri-peresmian-kampus-bareng-sultan-perakutm_campaign=detikcomsocmed&utm_medium=oa&utm_source=twitter&utm_content=detikcom

Tags: FACT CHECK மறுப்பு செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback