Breaking News

அமேசானில் சைனீஸ் நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு நடந்தது என்ன முழு விவரம் Girl dies after eating Chinese noodles

அட்மின் மீடியா
0

அமேசானில் சைனீஸ் நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு நடந்தது என்ன முழு விவரம் A girl died after buying Chinese noodles in Amazon

 


திருச்சி மாவட்டம் அரியமங்கலம், அம்பிகாபுரம் காந்திஜி தெருவில் வசிப்பவர் ஜான் ஜுடி இவர் பொன்மலை ரயில்வே பணியாற்றி வருகிறார். இவரது மகள், இவரது மகள் ஸ்டெபி ஜாக்குலின் மெயில்ஸ், அவருக்கு வயது 15 இவர் திருச்சியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்

இந்த நிலையில் 01-09-24 அன்று இரவு அமேசானில் ஆர்டர் செய்து வாங்கி வைத்திருந்த சைனீஸ் புல்டாக் சைனிஸ் நூடுல்ஸை சமைத்து சாப்பிட்டு இரவு படுத்து தூங்கியுள்ளார். காலையில் அவரது பெற்றோர் எழுப்பி பார்த்தபோது அவர் கண் விழிக்காததால் அருகில் உள்ள ஒரு மருத்துவரை அழைத்து சோதித்துப் பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரியவந்தது. 

இந்நிலையில் சிறுமி இறப்பில் சந்தேகம் உள்ளது என அரியமங்கலம் போலீசார் தகவல்  அறிந்து விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் சிறுமி இறந்ததற்கு காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்ட நூடுல்ஸால்தான் சிறுமி உயிரிழந்ததாக தகவல்கள் பரவி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சைனா நூடுல்ஸ் மொத்த விற்பனையாளரிடம் இருந்து காலாவதியான 800 கிலோ உணவுப் பொருட்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback