Breaking News

தமிழக அரசு சார்பில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் gold appraiser training

அட்மின் மீடியா
0

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப வளர்ச்சி மையம் சார்பில், வரும் 21 மற்றும் 22-ம் தேதிகளில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடைபெறும். 

தங்க நகை மதிப்பீட்டாளர் பின்பற்ற வேண்டிய விதிமுறை கள், தங்கத்தில் கலப்படங்களை அறியும் முறை, தங்கத்தின் தரம் பார்க்கும் முறை, அடிப்படை உலோகவியல், தங்க நகை, கல் நகைகளுக்கு அவற்றின் தன் மைக்கு ஏற்ப கடன் வழங்கும் முறை உள்ளிட்டவை குறித்து பயிற்சியில் கற்றுத் தரப்படும். 

நகைக் கடைகளில் வேலை வாய்ப்பு மற்றும் சொந்தமாக தொழில் தொடங்கவும், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் தங்கநகை மதிப்பீட்டாளராக பணி புரியவும், தரமான நகைகளை வாங்கவும் இப்பயிற்சி உதவும். 

பயிற்சி கட்டணம் ரூ. 6,500. 

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும்.

பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். 

கூடுதல் விவரங்களுக்கு 86676 36706, 9894943505 தொடர்பு கொண்டு அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு அவசியம்

அரசு சான்றிதழ் வழங்கப்படும்

Tags: தொழில் வாய்ப்பு வேலைவாய்ப்பு

Give Us Your Feedback