இலங்கை நாட்டின் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்ப்பு Harini Amarasuriya as the New Prime Minister of Sri Lanka
இலங்கை நாட்டின் இடைக்கால பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்பு! நீதி, கல்வி, தொழில், கைத்தொழில், விஞ்ஞானம், தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீட்டு அமைச்சராகவும் பதவி ஏற்றுக்கொண்டார் Dr. Harini Amarasuriya sworn in as the New Prime Minister of Sri Lanka.
Harini Amarasuriya as the New Prime Minister of Sri Lanka |
இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் அனுரா திசநாயகே வெற்றி பெற்றதையடுத்து நேற்று அவர் அதிபராக பதவியேற்றார். இதனையடுத்து பிரதமர் பதவியில் இருந்த தினேஷ் குணவர்தன ராஜினாமா செய்தார்
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இலங்கையின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இலங்கை அரசியல் வரலாற்றில் 3வது பெண் பிரதமர் என்ற பெருமையை ஹரிணி அமரசூரிய பெற்றுள்ளார்.
இலங்கையின் 16வது பிரதமரான அவருக்கு நீதி, கல்வி, தொழிலாளர், தொழில்துறை, சுகாதாரம், முதலீடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்