இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் உள்ளிட்ட 16 கமாண்டர்கள் உயிரிழப்பு இஸ்ரேலிய ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு Hasan Nasrallah
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழப்பு இஸ்ரேலிய ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகம் மீது டன் கணக்கான எடைகொண்ட பதுங்கு குழி குண்டுகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், நஸ்ரல்லாவின் நிலை என்ன என்பது பற்றிய உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை
இந்நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் பயங்கர தாக்குதல்ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா உள்ளிட்ட 16 கமாண்டர்களும் உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் அமைந்துள்ள லெபனான் நாட்டின் தெற்கு பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்ததற்கு எதிராக உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஹிஸ்புல்லா இயக்கம். கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அரசியல் இயக்கம் ஈரான் நாட்டின் ஆதரவுடன் இயங்கி வருகிறது.
வெள்ளிக்கிழமை மாலையில் ஹெஸ்பொலா தலைமையகத்தை குறிவைத்து நடந்த தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF-ஐடிஎப்) தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில், "ஹசன் நஸ்ரல்லா இனி உலகத்தை அச்சுறுத்த முடியாது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நஸ்ரல்லா மற்றும் பிற ஹெஸ்பொலா தளபதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.ஹெஸ்பொலாவின் மத்திய தலைமையகத்தின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், ஹெஸ்பொலாவின் இந்த தளம் பெய்ரூட்டின் தாஹிஹ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் கீழே செயல்பட்டு வந்ததாகவும் ஐடிஎப் கூறியது.
Tags: வெளிநாட்டு செய்திகள்