Breaking News

கோவையில் மாற்று மத பெண்களிடம் ஹிஜாப் சேலஞ்ச் யூடியூபரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார்! Hijab challenge youtuber arrested

அட்மின் மீடியா
0

கோவையில்  மாற்று மத பெண்களிடம் ஹிஜாப் சேலஞ்ச் யூடியூபரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார்! Hijab challenge youtuber arrested

 

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த அனஸ் அகமது . இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த 3-ம் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சிக்கு சென்ற இளம்பெண்களிடம் ‘ஹிஜாப் சவால்’ என்ற பெயரில், ஹிஜாப் அணிந்து பார்க்க விருப்பமா என தொகுப்பாளரை வைத்து கேள்வி கேட்க வைத்தார். 

Anas Ahmed from Coonoor, Nilgiris district. He runs a YouTube channel. On the 3rd, he asked the young women who went for a walk in the Coimbatore Racecourse area, in the name of 'Hijab Challenge', asking the host if they would like to see them wearing hijab.

விருப்பமுள்ள சில பெண்கள் ஹிஜாப் அணிந்தும் பார்த்தனர். பின்னர் ஹிஜாபுடன் இருக்கும் புகைப்படங்களை இளம்பெண்களிடம் தொகுப்பாளர் காட்டினார். இது தொடர்பான வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார், அந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

Some willing women were also seen wearing hijab. The presenter then showed the photographs of the girls with hijabs. He posted a video in this regard on his YouTube page, the video went viral and created a controversy, and there was strong opposition from various quarters

மேலும் கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த பாரத் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த  குமரேசன் சைபர் கிரைம் போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்தார்

Kumaresan, a member of Bharat Sena from Ganapati area of ​​Coimbatore, lodged a complaint with the Cyber ​​Crime Police.

அந்த புகாரை விசாரித்த சைபர் கிரைம் போலீசார், அனாஸ் அகமது மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவரை வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Anas Ahmed was arrested and produced in court by the cybercrime police after investigating the complaint. Following this, the judge has ordered him to be kept in judicial custody till the 20th.

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்திகள்

Give Us Your Feedback