உங்கள் மொபைல் போனின் ரேடியேஷன் அளவை தெரிந்துக் கொள்ளவது எப்படி How to check your smartphone's radiation level
How to check your smartphone's radiation level |
The International Commission on Non-Ionizing Radiation Protection (ICNIRP) has prescribed Specific Absorption Rate (SAR) for mobile Phones.DoT has approved the permissible SAR value limits for Mobile Phones to 1.6 W/Kg measured over 1 gm tissue.
பொதுவாக மொபைலை வாங்கும்போது போனின் அனைத்து அம்சங்களையும் பார்த்தாலும், மொபைல் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுகிறது என்பதில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால், உண்மையில் போனின் கதிர்வீச்சு குறைவாக இருந்தால் மட்டுமே அதனை வாங்க வேண்டும். நாம் வாங்கிய போனின் கதிர்வீச்சை எப்படி சரிபார்ப்பது தெரிந்து கொள்வோம் வாருங்கள்?
What is SAR?
SAR stands for Specific Absorption Rate which is the unit of measurement for the amount of RF energy absorbed by the body when using a mobile phone. Although the SAR is determined at the highest certified power level in laboratory conditions, the actual SAR level of the phone while operating can be well below this value.
This is because the phone is designed to use the minimum power required to reach the network. Therefore, the closer you are to a base station, the more likely it is that the actual SAR level will be lower.
SAR மதிப்பு என்றால் என்ன:-
SAR Value என்றால் கையடக்க தொலைபேசியில் இருந்து வெளிவரும் ரேடியோ அதிர்வின் கதிர்வீச்சின் அளவு ஆகும்.
தொலைபேசியில் இருந்து வெளிவரும் கதிர் வீச்சினால் பல வகையான உடல் நல பாதிப்புகள் ஏற்படும்.
மனிதனின் தலைப்பகுதி மண்டை ஓட்டில் SAR Value தலைப்பகுதிக்கு குறைந்த பாதிப்பையும், உடலின் பாகங்களிற்கு அதிகமான பாதிப்பையும் ஏற்படுத்தும். இதனால் தலைப்பகுதிக்கு வேறாகவும், உடற்பகுதிக்கு வேறாகவும் SAR Value உள்ளது
SAR Value எப்படி கணக்கிடப்படுகிறது?
எலக்ட்ரோ மேக்னடிக் அலைகள் அல்லது ரேடியோ கதிர்கள் உடலுக்குள் ஊடுருவும் அளவை நிர்ணயிப்பதே SAR என்று அழைக்கப்படுகிறது.
போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு உடல் எந்த அளவில் உட்கொள்ளும் என்ற அளவைக் குறிக்கிறது.
இது நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனின் வாட்ஸ் பெர் கிலோ
கிராம் என்பதை அடிப்படையாக வைத்து மதிப்பிடப்படுகிறது. இந்தியாவில் SAR
மதிப்பு 1.6 W/Kg என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
SAR வேல்யூ அதிகமாக இருந்தால் என்னவாகும்?
இந்த SAR வேல்யூ குறைவாக இருந்தால், உங்கள் போன் மிகவும் பாதுகாப்பானது என்று அர்த்தம். குறைந்த அளவு கதிர்கள் உங்கள் சாதனத்தில் இருந்து வெளியேற்றப்படும் போது, அது உடலுக்குள் ஊடுருவினாலும் பெரியளவில் பாதிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது.
ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கதிர்கள் உங்கள் போனில் இருந்து வெளியேறினால் அது உங்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.
உங்கள் போனின் SAR விபரத்தை பார்ப்பது எப்படி:-
உங்கள் போனின் SAR விபரத்தை பார்க்க உங்கள் ஸ்மார்ட்போனின் டைலர் பேட் ஓபன் செய்யுங்கள்.
அடுத்து அதில் *#07# என்று டைப் செய்து கால் செய்யுங்கள்
அதன்பின்பு உங்கள் ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவில் SAR மதிப்பீடு காட்டப்படும்
SAR value check using your phone's dialer To do this
open the Phone app and enter the USSD code for SAR value.
For Android users, dial *#07# and tap on RF Exposure. A new window will appear, displaying your device's radiation levels.
SAR மதிப்பு எவ்வளவு இருக்க வேண்டும்?
பாதுகாப்பான SAR மதிப்பு எவ்வளவு இருக்க வேண்டும்?
பாதுகாப்பான SAR மதிப்புக்கான தரநிலை 1.6 W/kg ஆகும்.
அதாவது உங்கள் உடலில் 1 கிலோவிற்கு 1.6 W/kg ஆகும்.
அதை விட அதிகமாக இருக்கும் எதுவும் உங்கள் உடல் திசுக்களுக்கும், உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். எனவே, மொபைலை வாங்கும் போது, SAR மதிப்பு 1.6 W/Kg அளவிற்குள் உள்ளதைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
இதேபோல், *#06# என்று டைப் செய்தால் உங்கள் IEMI நம்பர் விபரங்களை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
மொபைலில் SAR மதிப்பு தெரியவில்லை என்றால்
சில செல்போன்களில் *#07# டைப் செய்தால் SAR பற்றிய விவரங்கள் ஏதும் வரவில்லை என்றால் அந்த மொபைல் போன்கள் விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட பழைய செல்போன்கள் ஆகும் இதில் SAR பற்றிய விவரங்கள் வர வாய்ப்பில்லை பதட்டம் வேண்டாம்
உங்கள் மொபைலின் SAR அளவு பரிந்துரைக்கப்பட்ட தரநிலையின்படி இருந்தாலும்,
நீங்கள் மொபைலைக் குறைவாகவே பயன்படுத்த வேண்டும். மொபைலை தொடர்ந்து
பயன்படுத்துவது உயிருக்கு உலை வைக்கும் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்