Breaking News

பீகாரில் அதிர்ச்சி - தான் ஏமாற்றப்பட்டது தெரியாமல் IPS அதிகாரி என உலா வந்த 18 வயது இளைஞர் கைது நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

பீகாரில் அதிர்ச்சி - தான் ஏமாற்றப்பட்டது தெரியாமல் IPS அதிகாரி என்று சுற்றித் திரிந்த 18 வயது இளைஞர் நடந்தது என்ன முழு விவரம்

18-year-old Bihar youth poses as IPS officer, arrested
18-year-old Bihar youth poses as IPS officer, arrested

பீகார் மாநிலத்தில் லக்கிசராய் பகுதியில் உள்ள கோவர்தன் பிஹா கிராமத்தில் மிதிலேஷ் மஞ்சி Mithilesh Manjhi என்ற 18 வயது இளைஞர் ஐபிஎஸ் சீருடையில் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றவர் தனது தாயாரிடம் தான் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி என்றும், தற்போது பயிற்சியில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த தகவல் காட்டுதீபோல் பரவி மக்கள் கூட்டம்  அதிகரிக்கவே இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.விரைந்து வந்த போலீசார் மிதிலேஷை அழைத்து விசாரித்துள்ளனர். 

அப்போது தான் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி என்றும் தனக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதோடு தன்னிடம் இருந்த துப்பாக்கியை கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.அப்போதுதான் மிதிலேஷ் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. 

அதாவது வெறும் 10-ம் வகுப்பு மட்டுமே முடித்திருக்கும் மிதிலேஷை கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனோஜ் சிங் என்பவர் சந்தித்துள்ளார். அவரிடம் பேசும்போது, ரூ.2.3 லட்சம் பணம் இருந்தால், ஐ.பி.எஸ் அதிகாரி ஆகிவிடலாம் என்று கூறியுள்ளார். 

இதனை நம்பிய மிதிலேஷ் தனது தாய்மாமாவிடம் இருந்து ரூ.2 லட்சத்தை கடனாக பெற்று அதில் பாதியை மனோஜ் சிங்கிடம் கொடுத்துள்ளார் அடுத்த நாள் மிதிலேஷிடம் காவலர் சீறுடை பேட்ஜ் மற்றும் துப்பாக்கியும் கொடுத்துள்ளார். மேலும் அவர் தற்போது பயிற்சியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை கண்ட மிதிலேஷ், உண்மையில் தான் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி என நம்பி, போலீஸ் உடையில் சுற்றித்திரிந்துள்ளார். தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் மிதிலேஷிடம் இருந்து போலீஸார் துப்பாக்கியை பறிமுதல் செய்து சோதனை செய்த போது, அது போலி துப்பாக்கி என தெரியவந்துள்ளது. 

தொடர்ந்து கைது செய்யப்பட்டிருக்கும் மிதிலேஷிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback