தனது மனைவியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு! நடந்தது என்ன முழு விவரம் Jayam Ravi and wife Aarti announce separation
மனைவியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு! Jayam Ravi and wife Aarti announce separation
தமிழ்நாட்டின் பிரபல நடிகரான ஜெயம்ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாக கூறி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிவிப்பில்
வாழ்க்கை என்பது பவ்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள். பத்திரிக்கை ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
நீண்டகால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே. நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி.
ஆங்கிலத்தில்:-
Life is a journey filled with various chapters, each presenting its own opportunities and challenges. As many of you have followed my journey both on and off screen with utmost love and support, I have always strived to be as transparent and honest with my Fans and the Media as much as possible. It is with a heavy heart that I must share a deeply personal update with all of you. After much thought, reflections and discussions, I have taken the difficult decision to proceed with the dissolution of my marriage with Aarti.
This decision was not made out of haste and it stems from personal reasons that I believe are in the best interests of everyone involved. In light of this, I hereby kindly request all of you to respect our privacy as well as that of our family members during this difficult time and appeal to all of you to refrain from making any assumptions, rumors or allegations in this regard and let the matter remain private.
My priority has always remained the same to continue bringing lov and entertainment through my films to my dearest audience. I am still and will always be your Jayam Ravi-who is chenshed by all of you throughout my career and as an actor who is dedicated to my craft and commitment to showcase the best of my talent. Your constant support means the world to me and I am grateful for the love you have showered on me over the years. Thank you for your understanding and continued support.
Tags: தமிழக செய்திகள்