Breaking News

திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு வெளியான ஆய்வக அறிக்கை laddu lab reports

அட்மின் மீடியா
0

திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு வெளியான ஆய்வக அறிக்கை laddu lab reports

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு ஆகியவை கலந்திருப்பதாக ஆய்வக அறிக்கைகளை வெளியிட்ட தெலுங்கு தேசம் கட்சி Telugu Desam Party releases lab reports on fish oil, beef fat in ghee used to make laddu

திருப்பதி கோயில் பிரசாதம் லட்டு தயாரிப்புக்கான நெய்யில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் கடந்த ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிப்பில் தரமற்ற நெய் பயன்படுத்தப்பட்டதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

 


ஆந்திரமாநிலம் அமராவதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். 

அப்போது பேசிய அவர் புகழ்பெற்ற திருமலை லட்டு பிரசாதத்தின் புனிதத்தன்மையை ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசில் திருமலை லட்டுகள், சுத்தமான நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தி கடந்த ஆட்சியில் தயாரிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். 

கோயிலில் பிரசாதம் தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டதாக, நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பிரசாதத்தின் தரத்தை மீட்டெடுத்துள்ளதாகவும், தூய்மையான பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதாகவும் சந்திரபாபு கூறினார்.

இந்நிலையில் திருப்பதி லட்டு பிரசாதத்தில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது குறித்தான உறுதி செய்யப்பட்ட ஆய்வறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சிப் பிரமுகர் வெங்கட்ராமனா ரெட்டி ஊடகங்களுக்கு வெளியிட்டார்.

அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு ஆகியவை கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பாமாயில் கலந்து இருப்பதும் அதில் உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்து ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளார்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback