இலங்கையின் புதிய அதிபராகிறார் இடதுசாரி வேட்பாளர் அநுர குமார திசநாயக்க முழு விவரம் Leftist candidate Anura Kumara Dissanayake is the new President of Sri Lanka
இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக்க பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார் Leftist candidate Anura Kumara Dissanayake is the new President of Sri Lanka
Leftist candidate Anura Kumara Dissanayake is the new President of Sri Lanka |
அநுர குமார திசநாயக்க
அனுராதபுரத்தில் 1968-ல் எளிய குடும்பத்தில் பிறந்தவர் 55 வயதான திசநாயகே அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புத்தேகம கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். களனி பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தவர், தனது கல்லூரி நாட்களிலேயே மாணவர் அரசியலில் ஈடுபட்டார்.
1987ஆம் ஆண்டு முதல் ஜனதா விமுக்தி பெருமுனாவில் இணைந்து தற்போது அதன் தலைவராக உள்ளார் மேலும் தேசிய மக்கள் சக்தி கூட்டமைப்பின் தலைவராக உள்ளார்
மாற்றத்தை முன்னிறுத்தி தேர்தலை கண்ட ஏகேடிக்கு அமோக வரவேற்பு: இளைஞர்கள், சிங்களர்கள், தமிழர்கள் என அனைத்து தரப்பினருக்கும் மாற்றத்துக்கு வாக்களிப்பு
இலங்கையின் புதிய அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! தேசிய மக்கள் சக்தி கட்சியின் அநுர குமார திசநாயக்க இலங்கை கண்டன் அதிபராகிறார். இலங்கை அதிபர் தேர்தலில் 50%க்கும் அதிகமான வாக்குகளை பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
இதுவரை எண்ணப்பட்டவற்றில் அனுர குமார திசநாயக்க 53.84% வாக்குகளைப் பெற்றார்.மொத்தம் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 16 மாவட்டங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 16 மாவட்ட தேர்தல் முடிவுகளில் அனுர குமார திசநாயக்க அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
இதன்மூலம், இலங்கையின் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக்க அதிபராக வாய்ப்பு உருவாகியுள்ளது.
இடதுசாரி கொள்கையை பின்பற்றி வரும் அனுர குமார திசநாயக்க கடந்த ஐந்து வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளார். அதன் முடிவு தான் தற்போதைய தேர்தலில் எதிரொலித்து வருகிறது.
Tags: அரசியல் செய்திகள் வெளிநாட்டு செய்திகள்