Breaking News

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் மழை பெய்யுமா வானிலை ஆய்வு மையம் அப்டேட் A low pressure area formed in the Bay of Bengal

அட்மின் மீடியா
0
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் மழை பெய்யுமா வானிலை ஆய்வு மையம் அப்டேட்

மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

A low pressure area formed in the Bay of Bengal will bring rain in Tamil Nadu Meteorological Center Update

A low pressure area has formed over the central west and northwest Bay of Bengal, the Meteorological Department said. 



இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

இன்று (05-09-2024) மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் ஒரு காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த இரண்டு தினங்களில் வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் தெரிவித்திருக்கிறது

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் காரணமாக இன்று கடலோர ஆந்திர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்து வரும் நாட்களில் ஒடிசாவில் மிக கனமழக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. 

தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும், அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

05.09.2024 மற்றும் 06.09.2024: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

07.09.2024 முதல் 11.09.2024 வரை: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: 

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback