சென்னை திரும்பிய மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார் முழு விவரம் mahavishnu arrested
அட்மின் மீடியா
0
ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பிய மூடநம்பிக்கை பேச்சாளர் மகா விஷ்ணுவிடம், சென்னை விமான நிலையத்தில் வைத்து சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையர் விசாரணை நடத்தி வருகின்றார்கள்
சென்னையில் அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற அடிப்படையில் சொற்பொழிவை நடத்த திருப்பூர் மாவட்டத்தில் பரம்பொருள் அறக்கட்டளை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர் அழைத்துவரப்பட்டுள்ளார்.
அவர் உரையாற்றும்போது முழுக்க முழுக்க ஆன்மீகம் மறுபிறவி தொடர்பான கருத்துக்களையும் மந்திரம் சொன்னால் போதும் அனைத்தும் நடக்கும் என அவர் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆசிரியர் ஒருவர் குறுக்கிட்டு இது மாணவர்களுக்கான மோட்டிவேஷனல் பேச்சா அல்லது ஆன்மீக சொற்பொழிவா? மறு பிறவி பற்றி பேசுறீங்க, கர்மா பற்றி பேசுறீங்க” என்று அந்த ஆசிரியர் கேட்டதும் உங்கள் பெயரை சொல்லுங்கள் என்று உரத்த குரலில் அவர் கேட்கிறார்.
அரசுப் பள்ளிகளில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சை பேச்சு வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2024/09/blog-post_55.htmlஇது தப்பு’ என்று அந்த ஆசிரியர் சொல்கிறார். மறுபிறவி பற்றி ஏன் சொல்கிறீர்கள் என்று அந்த ஆசிரியர் கேட்டதற்கு விதண்டாவாதமாக அந்த சொற்பொழிவாளர் ஆசிரியரிடம் கேட்கிறார்.இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரல் ஆனதை தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில் பரம்பொருள் அறக்கட்டளையின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் பரம்பொருள் அறக்கட்டளையில் போலீசார், உளவுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவில் இதற்கு கிளை இருப்பது தெரியவந்துள்ளது. அறக்கட்டளையை நடத்தும் மகாவிஷ்ணு என்பவர் தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும், சில தினங்களில் இந்தியா வருவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் பட்டப் பகலில் சாலையில் இளம்பெண் பலாத்காரம் சுற்றி நின்று வீடியோ எடுத்த மக்கள் நடந்தது என்ன முழு விவரம்
https://www.adminmedia.in/2024/09/in-madhya-pradesh-teenage-girl-rape-on.html
மகா விஷ்ணுவின் பின்னணி, அறக்கட்டளையின் வருவாய் மற்றும் என்னென்ன பணிகளில் ஈடுபடுகிறது, எந்தெந்த பள்ளிகளில் என்னென்ன தலைப்புகளில் அவர் பேசியுள்ளார் என்ற பல கோணத்தில் விசாரணை நடக்கிறது.
இந்நிலையில் மகா விஷ்ணு வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்ததார்
அதில் நான் எங்கும் ஓடி, ஒளியவில்லை. ஓடி ஒளியும் அளவுக்கு எந்த தவறான கருத்தையும் கூறவில்லை. தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. எனது ஆஸ்திரேலிய பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று. 8 நாட்களுக்கு முன்பாகவே ஆஸ்திரேலியா வந்துவிட்டேன். என்னை பற்றிய புகாருக்கு விளக்கம் தருவதற்காகவே நான் சென்னை வருகிறேன். இன்று மதியம் 1 மணிக்கு சென்னைக்கு வர உள்ளேன். சென்னை வந்ததும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து எனது தரப்பு விஷயங்களை எடுத்து சொல்வேன். தமிழ்நாடு காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர உள்ளேன் எனக் குறிப்பிட்டு இருந்தார்
அதே போல் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவிடம் சைதாப்பேட்டை உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் விமான நிலையத்தில் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்
விமான நிலையத்திலிருந்து மகாவிஷ்ணுவை அழைத்துச் சென்ற போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை தெற்கு இணை ஆணையர் சி.பி.சக்கரவர்த்தி, அடையாறு துணை ஆணையர் பொன் கார்த்திக் சுமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்வேறு தரப்பினர் அளித்த புகார்கள் தொடர்பாகவும் மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்