முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்! minister senthil balaji news
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். கடந்த ஓர் ஆண்டாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு இன்னும் ஜாமின் கிடைக்கவில்லை
Senthil Balaji News in Tamil |
அமலாக்கத் துறை தொடர்ந்த இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம் சங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து இரு தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு கூறப்படுகிறது. நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.
இதனால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? என அரசியல் வட்டாரத்தில் பலத்த எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களாக விசாரணை குற்றவாளியாக இருப்பதால், அவரின் அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உள்ளது
ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போடவேண்டும்
இவ்வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும் அவர் ஒத்துழைப்பு தரவேண்டும்
எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது
Tags: அரசியல் செய்திகள்