Breaking News

சாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற இளைஞர் மீது தாக்குதல் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது! naam tamilar katchi arunagiri arrested

அட்மின் மீடியா
0

சாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற இளைஞர் மீது தாக்குதல்; நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது!

மணப்பாறையை அடுத்த சொரியம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த திரிஷா என்பவரும் கல்லூரியில் படித்து வரும் சூழ்நிலையில், கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். 

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரின்  காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 14-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொள்வதற்காக மதுரையில் அருகே உள்ள இலுப்பைக்குளத்தில் தங்கியிருந்தனர். பெண்ணின் உறவினர்கள், அவர்களை தேடி வந்த நிலையில், அவர்கள் மதுரையில் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. 


இதை அறிந்த பெண்ணின் உறவினரும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான அருணகிரி உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து, அவர்களை வலுக்கட்டாயமாக காரில் அழைத்து வந்தனர். அதன் பிறகு சந்தோஷிடம் இருந்த 20 ஆயிரம் பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து, கொடூரமாக தாக்கி உள்ளார். பின்னர் சந்தோஷை வழியிலேயே இறக்கி விட்டு அந்தக் கும்பல் அந்தப் பெண்ணை அழைத்து சென்றனர். 

இந்த தாக்குதலில் காயமடைந்த சந்தோஷ் அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அவர் அளித்த புகாரின் பேரில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அருணகிரி, பிரவீன், கார்த்தி, சாமிக்கண்ணு உள்ளிட்ட 3 பேரையும் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்கள் 4 பேரையும் சிறையில் அடைத்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட அருணகிரி, கடந்த 2016 சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback