தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினராக நவாஸ்கனி தேர்வு Navaskani has been selected as a member of the Tamil Nadu Waqf Board
தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினராக நவாஸ்கனி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் அறிவிப்பு Navaskani has been selected as a member of the Tamil Nadu Waqf Board
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-
தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில், பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவில் ஒரு காலியிடத்திற்கான தேர்தல் கால அட்டவணை 06.09.2024 அன்று அறிவிக்கையாக வெளியிடப்பட்டது. பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு திரு. K. நவாஸ்கனி, என்ற பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தேர்தலில், மேற்கண்ட பிரிவில் ஒரு காலியிடத்திற்கு ஒருவர் மட்டுமே போட்டியிடுவதால், தமிழ்நாடு வக்ஃப் வாரிய (உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்துதல்) விதிகள், 1997, விதி 9(6)-ன் படி, திரு. K. நவாஸ்கனி, அவர்கள் தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
The Election schedule for conducting election of one member to the Tamil Nadu Waqf Board from the electoral college consisting of Muslim Members of Parliament from the State had been notified in the Tamil Nadu Government Gazette Extraordinary dated 06.09.2024.
Thiru K. Navaskani, Muslim Member of Parliament from the State of Tamil Nadu was filed his nomination. Since, only one candidate was contesting in the election for one seat under the category of Muslim Members of Parliament from the State,
Thiru K. Navaskani, as duly elected as per rule 9 (6) of the Tamil Nadu Waqf Board (Conduct of Election for Members) Rules, 1997, as member of Tamil Nadu Waqf Board.
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி