கண்ணுக்கு சொட்டு மருந்து விட்டால் போதும் கண்ணாடி வேண்டாம் புதிய மருந்து அறிமுகம் முழு விவரம் No more reading glasses, eye drops are enough
இனி ரீடிங் கண்ணாடி வேண்டாம் கண்ணுக்கு சொட்டு மருந்து விட்டால் போதும் முழு விவரம் No more reading glasses, eye drops are enough
பொதுவாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு வரும் பிரச்னை, 'பிரஸ்பயோபியா' பிரச்சனைதான் இதற்க்கு மூக்கு கண்ணாடி அணிவது, அறுவை சிகிச்சை செய்வது போன்றவை தான் தீர்வாக உள்ளது Presbyopia is a common problem in people over 40 years of age, which can be treated by wearing glasses or surgery
New Eye Drops Offer an Alternative to Reading Glasses |
பிரஸ்பயோபியா:-
இந்த பாதிப்பு இருப்போருக்கு அருகே உள்ள பொருட்களைத் தெளிவாகப் பார்க்க முடியாது. புத்தகங்களைப் படிக்கச் சிரமப்படுவார்கள். தற்போது இந்த பிரச்னைக்கு, ஒரு கண் சொட்டு மருந்து வாயிலாக தீர்வு கிடைக்க உள்ளது. இந்த கண் சொட்டு மருந்து கண்ணாடிகளின் தேவையை நீக்குவது மட்டுமின்றி, கண்கள் வறண்டு போகாமலும் பார்த்துக் கொள்கிறது.
மருந்து:-
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்படும் 'என்டோட் பார்மசூட்டிகல்ஸ்' என்ற மருந்து நிறுவனம், 'பிரஸ் வியூ' என்ற கண் சொட்டு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த கண் சொட்டு மருந்துக்கு இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் இப்போது ஒப்புதல் அளித்துள்ளது
இது, 40 முதல் 55 வயதுக்குட்பட்ட வெள்ளெழுத்து பிரச்னை உள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வை அளிக்கும் என, அந்த நிறுவனம் கூறியுள்ளது.
Tags: இந்திய செய்திகள்