Breaking News

பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து 4 பேர் உடல் நசுங்கி பலி 4 people were crushed to death when a car collided with a stationary lorry

அட்மின் மீடியா
0

மலேசியாவில் இருந்து சென்னை வந்த மகன் வீட்டிற்க்கு செல்லாமல் நண்பர்களுடன் மாமல்லபுரம் சென்று விட்டு திரும்பும் போது கார் விபத்துக்குள்ளாகி 4 பேர் பலி

சென்னை அடுத்த கோவளம் அருகே செம்மஞ்சேரியில் பழுதாகி நின்று கொண்டு இருந்த சரக்குவாகனமான ஈச்சர் லாரியில் கார் மோதி பயங்கர விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் Four people died on the spot after a car collided with a broken-down cargo truck at Semmancheri near Kovalam, Chennai.


சென்னை பார்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுல்தான். இவரது மகன்  முகமது ஆஷிக். இன்று அதிகாலை 1.30 மணியளவில் தான் மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார்.அவரை வரவேற்று அழைத்துச் செல்ல திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த அவரது நண்பர்களான அஸ்ரப் முகமது, ஆதில் முகமது, சுல்தான் மூவரும் சென்னை விமான நிலையம் வந்திருந்தனர்.

முகம்மது ஆஷிக் வெளியே வந்ததும் அவரது உடைமைகளை காரில் ஏற்றிக் கொண்டு நேராக வீட்டிற்குச் செல்லாமல் வண்டலூர் வழியாக இசிஆர் வழியாக மாமல்லபுரம் சென்றனர்.அங்கு சிறிது நேரம் தங்கிவிட்டு, விடியற்காலை 4 மணியளவில் நால்வரும் சென்னையை நோக்கிப் புறப்பட்டனர்.

சென்னை அடுத்து கோவளம் செம்மஞ்சேரி அருகே நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது அதே மார்கத்தில் அதிவேகமாக வந்த ஹோண்டா சிட்டி கார், கட்டுப்பாட்டை இழந்து நின்றிருந்த லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் முழுவதும் லாரியின் பின்பக்கதின் கீழ் சிக்கி கொண்டதில் காரில் இருந்து 4 இளைஞர்களும் உயிரிழந்தனர்

.சம்பவம் அறிந்து வந்த போலீசார் இடிபாடுகளில் சிக்கிய உடல்களை தீயணைப்புத் துறை உதவியுடன் கிரேன் மூலம் இளைஞர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையே முகம்மது ஆஷிக்கின் தந்தை சுல்தான் கூறுகையில்

நானும் மலேசியாவில்  வேலை செய்கிறேன். என்னுடன் சிறிது நாட்கள் இருந்த மகனை நேற்று மாலை தான் ஏர்போர்ட் சென்று விமானத்தில் சென்னைக்கு வழியனுப்பி வைத்தேன்.

அவன் நேராக வீட்டுக்கு சென்றிருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது. இப்படி ஜாலியாக ஊர் சுற்றிவிட்டு சென்றதால், விபத்தில் பலியாகிவிட்டான். என் மகனை நான் இழந்துவிட்டேன்" என உருக்கமாக தனது சோகத்தை தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback