Breaking News

பத்திரப்பதிவின்போதே உடனடியாக பட்டா வழங்க ஒரு நிமிட பட்டா திட்டம் முழு விவரம் One-Minute Patta Program for immediate issuance of Patta at the time of deed registration

அட்மின் மீடியா
0

பத்திரப்பதிவின்போதே உடனடியாக பட்டா  வழங்க ஒரு நிமிட பட்டா திட்டம் முழு விவரம்



பத்திரப்பதிவின் போதே உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்து வழங்கும் ஒரு நிமிட பட்டா திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை பத்திரப்பதிவின் போதே பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. 

ஆனால் கிராமங்களில் நத்தம் என வகைப்படுத்தப்பட்ட குடியிருப்புகளுக்கு உடனடியாக பட்டா வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ஒரு நிமிட பட்டா திட்டத்தை, தமிழக அரசு விரிவாக்கம் செய்து உள்ளது. அதற்காக பத்திரப்பதிவுத்துறை சர்வரில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன் மூலம் இனி, கிராமங்களில் உள்ள வீடுகளை பத்திரப்பதிவு செய்யும் போதே உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும் பணி தொடங்கிவிட்டது.

இதன் மூலம் உட்பிரிவு செய்ய தேவையில்லாத நிலங்களை பத்திரப்பதிவு செய்யும் போதே உடனடியாக பட்டா மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback